×

முன்னாள் படைவீரர்களுக்கு செக்யூரிட்டி, ப்யூன் வேலை

சிவகங்கை, நவ.5 : முன்னாள் படைவீரர்கள் இந்தியன் வங்கியில் செக்யூரிட்டி கார்டு மற்றும் ப்யூன் பணிக்கு விண்ணப்பிக்கலாம். சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் வரதராஜன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இந்தியன் வங்கியில் ஜூனியர் செக்யூரிட்டி கார்டு மற்றும் ப்யூன் பணியிடங்களுக்கான முன்னாள் படை வீரர்களது விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இப்பணிகளுக்கு தகுதியுடைய சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் www.indianbank.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 08.11.2019. கூடுதல் விபரங்களுக்கு மேற்காணும்  இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை காணலாம். விண்ணப்பித்த விவரத்தை 25.11.2019க்குள் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Veterans ,Pure ,
× RELATED தூத்துக்குடி தூய பனிமயமாதா ஆலய 438வது...