×

ஏர்வாடி தர்ஹா அருகே அகற்றாத குப்பைகளால் நோய் ஆபத்தில் மக்கள்

கீழக்கரை, நவ.5: ஏர்வாடி தர்ஹா அருகில் வெகுநாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால், துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். ஏர்வாடி தர்ஹாவில் புகழ்பெற்ற மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹா உள்ளது, இந்த தர்ஹாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு வெளி மாட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து மகானை தரிசித்து செல்கின்றனர்.இந்நிலையில் தர்ஹாவின் முன்புறத்தில் பல நாட்களாக ஊராட்சி நிர்வாகம், அங்கு சேரும் குப்பைகளை அகற்றாமல் அப்படியே போட்டு வைத்துள்ளதால் குப்பைகளில் மழைநீர் சேர்ந்து சேரும் சகதியுமாக மாறி துர்நாற்றம் வீகிறது. இதனால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூரில் இருந்து வருபவர்களுக்கும் தொற்று பரவும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தர்ஹா எதிர்புரத்தில் உள்ள சாலையில் சேரும் குப்பைகளை பல நாட்களாக அகற்றாமல் நோய் பரவும் சூழ்நிலை உள்ளது. மேலும் இந்த பகுதியில் செல்லும் வெளியூர் பக்தர்கள் துர்நாற்றத்தை சகித்து கொள்ள முடியாமல் மூக்கை மூடிக்கொண்டு செல்கின்றனர். இதுகுறித்து ஏர்வாடி ஊராட்சி நிர்வாகத்தில் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே உள்ளுர் மற்றும் வெளியூர் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை