×

எலிபேஸ்ட் சாப்பிட்ட பெண் சாவு

ஆர்.எஸ்.மங்கலம், நவ.5: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஏ.ஆர்.மங்கலத்தை அடுத்த புத்தேந்தல் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மனைவி சாந்தி(45). இவர் கடந்த சில வருடமாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விரக்தியடைந்த சாந்தி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் எலி பேஸ்ட் சாப்பிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர், இறந்தார். புகாரின் பேரில் ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED ஊரணியில் மூழ்கி சிறுமி பலி