×

பள்ளிக்கு வகுப்பறை கட்டிடம் வேண்டும் எம்.பி.யிடம் கோரிக்கை மனு

தொண்டி, நவ.5: ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி நேற்று தொண்டி, புதுப்பட்டிளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு வந்தார். அப்போது தங்கள் பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் ஏராளமான மனுக்கள் கொடுத்தனர். ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி நேற்று புதுப்பட்டினம், தொண்டி மற்றும் நம்புதாளை பகுதிக்கு நன்றி கூற வந்திருந்தார். அப்போது புதுப்பட்டினம் ஜமாத், வளர்பிறை மன்றம் மற்றும் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதில், புதுப்பட்டினம் புயல் காப்பகத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து ஊருக்குள் செல்லும் ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் சீரமைக்க வேண்டும். பள்ளிகூடத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்து தரவேண்டியும், போர்வெல் தண்ணீர் வீடுகளுக்கு கொடுப்பதற்கு தனி சம்பு அமைப்பது குறித்தும் மனு கொடுக்கப்பட்டது.

இதேபோல் நம்புதாளை அரசு துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜான் தாமஸ் கொடுத்த மனுவில், பள்ளியில் 400க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். போதிய கட்டிட வசதி இல்லாததால் பத்து வகுப்பறை கொண்ட கட்டிடம், சுற்றுச்சுவர் கட்டி தர வேண்டும். மேலும் மாணவர்களின் குடிதண்ணீர் பிரச்னையை போக்க கீழ் நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர கோரியும் மனு கொடுக்கப்பட்டது. தொண்டியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த கோரியும், புது பஸ் ஸ்டாண்ட் ரோட்டை சீர் செய்ய கோரியும் மனு கொடுக்கப்பட்டது.

Tags : school ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி