×

அறிவியல் இயக்கத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு திறன் அறிதல் தேர்வு

ராமேஸ்வரம், நவ. 5: ராமேஸ்வரத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான திறன் அறிதல் தேர்வு நடத்தப்பட்டது. ராமேஸ்வரத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாணவர்களிடையே அறிவியல் கண்ணோட்டத்தை அதிகப்படுத்தும் வகையில் மாநில அளவிலான திறன் அறிதல் போட்டியை நடத்தியது. அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையிலும், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் விதமாகவும் நடத்தப்படும் இத்தேர்வில் மாநிலம் முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதுகின்றனர்.

இத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுவதோடு, மாவட்டத்தில் முதல் இடம் பெறும் மாணவர்களுக்கும், மாநில அளவில் முதல் 10 இடங்களை பெறும் மாணவர்களுக்கும் அறிவியல் இயக்கம் நடத்திடும் அறிவியல் திருவிழாவில் கேடயம் மற்றும் பரிசு வழங்கப்படுகிறது.
மாவட்ட, மாநில அளவில் பரிசு பெறும் மாணவர்கள் அறிவியல் சுற்றுலாவில் பங்கேற்கவும், பல்வேறு விஞ்ஞானிகளை சந்தித்து உரையாடும் வாய்ப்பையும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்படுத்தி கொடுக்கிறது. ராமேஸ்வரத்தில் 4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சப்ஜூனியர், இளநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை என்ற 4 பிரிவுகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இத்தேர்வு நடைபெற்றது. இதில் ராமேஸ்வரம், பாம்பன் மற்றும் தங்கச்சிமடத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலாளர் சசிக்குமார் இதற்கான ஏறபாடுகளை செய்தார்.

Tags : school children ,
× RELATED இந்தியன் வங்கி சார்பில் மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிப்பு