×

விவசாய சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை

மதுரை, நவ. 5: மத்திய அரசின் புதிய விவசாய ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாய சங்கத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்  நடத்தினர்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், மத்திய அரசின் புதிய விவசாய ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை அண்ணா பஸ்நிலையம் திருவள்ளுவர் சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கலெக்டர் அலுவலகம் சென்றனர். அங்கு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ‘விவசாயிகளுக்கு எதிராக உள்ள புதிய ஒப்பந்தத்தை மத்திய அரசு ஆதரிக்ககூடாது என கோஷம் எழுப்பினர். பின்னர், இது தொடர்பாக கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைவர் காளிதாஸ் கூறும்போது, ‘‘விவசாயிகளுக்கான புதிய ஒப்பந்தத்தால் தெற்காசிய நாடுகளில் இருந்து பால் மற்றும் விவசாய பொருட்கள் இறக்குமதி செய்யும் நிலை உள்ளது. இதனால், இந்திய விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள், மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை பகடை காய்களாக பயன்படுத்துகின்றன’ என்றார்.

Tags : Agricultural Society ,Collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...