×

கண்மாய் நீர்வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு

மதுரை, நவ. 5: மதுரை மேற்கு ஒன்றிய இ.கம்யூ.,கட்சி செயலாளர் திருப்பதி கலெக்டர் வினயிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை வடக்கு தாலுகா ஆலங்குளம் கண்மாய்க்கு வரும் பிரதான கால்வாயில், தண்டலை பிரிவு வள்ளுவர் காலனிக்கு வரும் வழியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கடந்த 3 மாதமாக இந்த கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதில், 100 மீட்டர் மட்டும் இன்னும் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால், கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு வரமுடியவில்லை. ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் செயல்படுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனே கால்வாயை தூர்வாரி தண்ணீரை கண்மாய்க்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக பொதுப்பணித்துறை நடவடிக்க எடுக்க கலெக்டர் பரிந்துரை செய்தார்.

Tags : Collector ,canal ,
× RELATED உடனடியாக பிற்படுத்தப்பட்டோர் மக்கள்...