×

தென்கரை கோயிலில் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம்

சோழவந்தான், நவ. 5: சோழவந்தான் அருகே தென்கரை கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சோழவந்தான் அருகே, தென்கரையில் அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 28ம் தேதி துவங்கியது. இதையொட்டி பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். கடந்த சனிக்கிழமையன்று அன்னை பராசக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், சூரசம்ஹாரமும் நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் மாலை திருக்கல்யாணம் நடைபெற்றது. விக்னேஷ்வர பட்டர் மாப்பிள்ளை வீட்டாராகவும், நாகேஸ்வர பட்டர் பெண் வீட்டாராகவும் இருந்து வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணய சுவாமிக்கு திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். பக்தர்கள் திருமணத்திற்கு மொய் எழுதினர். ஆதித்யா புட்ஸ் நிறுவனர் செந்தில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தென்கரை பிரதோஷ கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags : Subramanya Swamy ,pilgrimage ,
× RELATED கொரோனா பரவலை தடுக்கும் வகையில்...