×

ஆத்தூர் அணையை நிரம்ப விடாமல் தடுக்கின்றனர்

திண்டுக்கல், நவ. 5: ஆத்தூர் காமராஜர் அணைக்கு தண்ணீரை நிரம்ப விடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்தனர். திண்டுக்கல் மாவட்ட குடகனாறு விழிப்புணர்வு குழுவினர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் விஜயலட்சுமியிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், ‘ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் நிரம்பி வெளியேறும் தண்ணீர் குடகனாறு வழியாக பல லட்சம் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது.

ஆனால் காமராஜர் நீர்த்தேக்கத்தில் தண்ணீரை நிரம்ப விடாமல் அப்பகுதியில் உள்ள சிலர் தடுத்து வருகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நரசிங்கபுரம் ராஜ வாய்க்காலில் ஷட்டர் அமைத்து நீர் பங்கீட்டை முறைப்படுத்தவும், மணல் கொள்ளையிலிருந்து குடகனாற்றை மீட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. முன்னதாக 20 கிராமங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க பேரணியாக வந்தனர்.

Tags : Athur ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு