×

கொடைக்கானலில் ஆரஞ்சு சீசன் ஆரம்பமானது

கொடைக்கானல், நவ. 5: கொடைக்கானலில் சீசன் துவங்கியதால் ஆரஞ்சு பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வருகின்றன. மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது ஆரஞ்சு பழ சீசன் துவங்கி உள்ளது. வைட்டமின் சி சத்துகள் அதிகம் உள்ள இந்த ஆரஞ்சு பழம் கொடைக்கானல் கீழ்மலையான பெருமாள்மலை, அடுக்கம், பேத்துப்பாறை, வடகவுஞ்சி, ஊத்து, பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகம் விளைகிறது. இந்தாண்டு ஆரஞ்சு விளைச்சல் அமோகமாக உள்ளதால் முதற்கட்ட அறுவடையை விவசாயிகள் துவக்கியுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘முதற்கட்ட அறுவடையிலே கூடுதலாக பழங்கள் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது ஒரு கிலோ ஆரஞ்சு பழம் ரூ.50 முதல் ரூ.60 வரை விற்கப்படுகிறது. இது நல்ல விலைதான்’ என்றனர்.

Tags : season ,Kodaikanal ,
× RELATED 17வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை மறுநாள்...