×

இந்த நாள் பாறையால் பக்.. பக்.. பயணம் 3 கிமீ தூரத்தில் வாக்குச்சாவடி அமைப்பதா? ஓட்டர் ஐடியை ஒப்படைக்கும் போராட்டம்

திண்டுக்கல், நவ. 5: வாக்குச்சாவடியை 3 கிமீ தூரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அழகர் சிங்கம்பட்டி மக்கள் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் அடுத்த செட்டிநாயக்கன்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்டது அழகர் சிங்கம்பட்டி. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் ஊரின் அருகேயுள்ள சென்னமநாயக்கன்பட்டியில் அமைக்கப்படும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்து வந்தனர். இந்நிலையில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடிகள் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இதில் அழகர் சிங்கம்பட்டியை சேர்ந்த வாக்காளர்களுக்கு 3 கிமீ தூரத்தில் உள்ள கள்ளிப்பட்டி ஊரில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சென்னமநாயக்கன்பட்டியிலே மீண்டும் வாக்குச்சாவடி அமைக்க வேண்டுமென வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு ஒப்படைப்பு போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்களை போலீசார் சமரசப்படுத்தி கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு அளிக்க அழைத்து சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘சென்னமநாயக்கன்பட்டியில் வாக்குச்சாவடியில் அமைத்தால் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்போம். இல்லையென்றால் தேர்தலை புறக்கணிப்போம்’ என்றனர். இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Buck ,
× RELATED நியாயமான தேர்தல் நடைபெறாவிட்டால்...