×

தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பொங்கலூர், நவ.5: திருப்பூர் வடக்கு மாவட்டம் பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தி.மு.க. ஊராட்சி செயலாளர்கள் வார்டு செயலாளர்கள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்ட உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் பல்லடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பல்லடம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி  தலைமை தாங்கினார்.மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியம் சிவகுமார் பல்லடம் முன்னாள் நகரமன்ற தலைவர் சேகர், ஒன்றிய துணைச் செயலாளர் சரஸ்வதி, பழனிச்சாமி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்  பழனிச்சாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜேஸ்வரன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் சேகர், ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முன்பாக உள்ளாட்சி தேர்தல் எதிர்கொள்வது, பூத் கமிட்டி குழு அமைத்து ஒற்றுமையாக செயல்படுவது, 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத காரணத்தால் மக்களின் அடிப்படை தேவைகளை இந்த அரசு கண்டுகொள்ளாத நிலை குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : DMK ,Executive Advisory Meeting ,
× RELATED தீரன் சின்னமலையின் கனவை நனவாக்க திமுக பாடுபடும்: மு.க.ஸ்டாலின் உறுதி