×

3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் வட்டார வளர்ச்சி அலுவலர் பட்டியல் தயார்

ஈரோடு, நவ. 5: தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இதனால், உள்ளாட்சி அமைப்புகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் முடங்கி கிடக்கிறது. இந்நிலையில், அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முதல் இளநிலை உதவியாளர் வரையிலான பட்டியல் சேகரிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் சொந்த ஒன்றியத்தில் பணியாற்றுவது ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் பட்டியல் சேகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல், 14 வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பணியாற்றி வரும் இதர ஊழியர்கள் விபரம் குறித்தும் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் பட்டியலில் இடம் பெற்றுள்ள அலுவலர்கள், ஊழியர்கள் ஓரிரு நாளில் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

Tags : Regional Development Officers ,
× RELATED இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட...