×

மாநகராட்சி அலுவலகத்தில் நிதி மேலாண்மை குறித்த பயிற்சி

திருப்பூர்,நவ.5: பொது நிதி மேலாண்மைத் திட்டம் குறித்த பயிற்சி வகுப்பு திருப்பூர் மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.  மாநகராட்சி கமிஷனர் சிவகுமார் தலைமை வகித்தார். நகராட்சிகளின் மண்டல  நிர்வாக  இயக்குனர் சுல்தானா முன்னிலை வகித்தார்.  இப்பயிற்சி வகுப்பில், திருப்பூர் மாநகராட்சி பணியாளர்கள், கோவை மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் திருப்பூர் மண்டலத்திற்குட்பட்ட நகராட்சி பணியாளர்கள் என 80க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு, முதுநிலை கணக்கு அலுவலர்கள் ரங்கநாதன், ராமகிருஷ்ணன் மற்றும் பூபாலன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இப்பயிற்சி வகுப்பானது இன்றும் (5ம் தேதி) நடைபெற உள்ளது.

Tags : Corporation Office ,
× RELATED நெற்பயிரில் ஒருங்கிணைந்த மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி