×

பாலக்காடு திப்புசுல்தான் கோட்டை அகழியில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

பாலக்காடு, நவ: 5: பாலக்காடு திப்புசுல்தான் கோட்டை அகழியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை எஸ்.கே.எஸ்.எஸ்.எப்., அமைப்பினர், தீயணைப்பு வீரர்கள், மின்வாரியம், சுகாதாரத்துறையினர், கோட்டை கிளப் அமைப்பினர், மாவட்ட போலீசார் மற்றும் தொல்லியல்துறை ஊழியர்கள் ஒருங்கிணைந்து அகற்றும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த பணியை பாலக்காடு எம்.எல்.ஏ., ஷாபிபரம்பில் நேற்று தொடங்கி வைத்தார்.  நூற்றுக்கும் மேலானோர் பங்கேற்று ஆகாயத்தாமரைகளை அகற்றி வருகின்றனர். பாலக்காடு டி.எஸ்.பி., ஷைஜூ இப்ராஹிம், கரிம்பா விஜிலன்ஸ் எஸ்.பி., சசிதரன், கிளப் தலைவர் முகமது காசீம், எஸ்.கே.எஸ்.எஸ்.எப்., மாநில தலைவர் விகாஸ், செயலாளர் ஜலீல் பைசல், பாலக்காடு மாவட்ட தலைவர் சுவதிக் பைசல், பொது செயலாளர் அஸ்கரலி கரீம், நகராட்சி செயற்குழுத்தலைவர் அப்துல் கபூர், வார்டு உறுப்பினர்கள் சுஜாதா, ரகீம், கிளப் செயலாளர் வக்கீல் ராஜேஷ்குமார், நிஷாத் பட்டாம்பி உட்பட ஏராளமானோர் ஆகாயத் தாமரைகள் அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.

Tags :
× RELATED மஞ்சூர் -தங்காடு சாலையில் மரங்கள்...