சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட 94 ரயில் நிலையங்களில் விளம்பரம் செய்ய அனுமதி

கோவை, நவ.5:  சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 94 ரயில் நிலையங்களில் தொழில் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த, ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட 11 ரயில் நிலையங்களில் உடல் எடை அளவு அறியும் (பாடி மாஸ் இன்டெக்ஸ்) இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இந்த வசதியை இலவசமாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இத்துடன் ரயில் கட்டணம் குறித்த தகவல் அறியும் மின்னணு பலகை 25 நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் பயணச்சீட்டு பதிவின் போது பயண கட்டண விவரம்,  வகுப்பு குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

வடகிழக்கு மாநிலங்களில் இருந்து கோவை, திருப்பூர்,  ஈரோடு வரும் தொழிலாளர்களுக்கென தனியாக கோவையில் இருந்து அசன்சோல் பகுதிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சேலம் ரயில்வே கோட்டத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் (கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் மற்றும் மேட்டுப்பாளையம் உட்பட 94 நிலையங்கள்) உற்பத்தி பொருள் மேம்பாட்டு பிரசாரம் நடக்கிறது. இதன் மூலமாக தொழில் நிறுவனங்கள், சிறு, குறு தொழில் நிறுவனத்தினர் அனைத்து ரயில் நிலையங்களில் தங்களது தயாரிப்பு குறித்து விளம்பரப்படுத்தலாம்.ரயில் நிலையங்களில் நிறுவனங்களின் தயாரிப்பு மற்றும் வணிக ஊக்குவிப்பு பிரசாரம், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை ரயில் நிலையங்களில் வாடிக்கையாளர்கள் பார்வையிடும் வகையில் காட்சிபடுத்துதல், தானியங்கி இயந்திரங்களில் குறைந்தபட்ச கட்டணத்தில் விளம்பரம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>