×

கூடலூரில் பள்ளிக்கூடத்தை சேதப்படுத்திய யானைகள்

கூடலூர், நவ. 5: கூடலூரை அடுத்த ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட  மூலக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று முன்தினம்  இரவு புகுந்த காட்டுயானைகள்  அங்குள்ள வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் சத்துணவு கூடம் ஆகியவற்றின் கதவுகளை உடைத்து  இடித்து அரிசி பருப்பு உள்ளிட்ட பொருட்களை நாசப்படுத்தி உள்ளது. மேலும் வகுப்பறையில் இருந்த பீரோ, டேபிள், சேர் உள்ளிட்ட பொருள்களையும் கீழே தள்ளி உடைத்துள்ளது. பள்ளியின் சார்பில் மின்வேலி அமைக்கப்பட்டிருந்த போதும் அதை தாண்டி காட்டு யானை சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை யானைகள் வந்து சென்றதை அறிந்த அப்பகுதி பெற்றோர்கள் தலைமை ஆசியர் மணிகண்டனுக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஜனார்த்தனன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்துள்ளனர். ஏற்கனவே, இது போன்று பல முறை காட்டுயானைகள் இந்தப் பகுதிக்கு அடிக்கடி வந்து பள்ளி கட்டிடத்திற்கு சேதம் விளைவித்து வந்துள்ளது. நான்காவது முறையாக யானைகள் இந்த பள்ளிக்கூட கட்டிடங்களை சேதப்படுத்தி உள்ளன.

Tags : school ,Cuddalore ,
× RELATED கூடலூர் அருகே வீட்டை உடைத்த காட்டு யானைகள்: தப்பி ஓடிய குடும்பத்தினர்