×

குன்னூரில் விதி மீறி கட்டப்பட்ட 3 வீடுகளுக்கு சீல்

குன்னூர், நவ. 5: குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில்  விதி மீறல் கட்டிடங்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.  சுமார் 1832 கட்டிடங்கள்  விதி மீறிய கட்டிடங்கள் என கூறி வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  நீதி மன்ற உத்தரவுப்படி  பல கட்டிடங்கள்  இடிக்காமல் முழுமையாக சீல் வைக்கப்பட்டது. ஆனால், சீல் வைக்கப்பட்ட அனைத்து கட்டிடங்களிலும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.  தற்போது குன்னூர் நகராட்சி அலுவலகத்தின் எதிரே உள்ள மவுண்ட் ரோடு சாலையில் புதிகாக கட்டப்பட்ட  3 கட்டிடங்கள் விதி மீறி கட்டப்பட்டுவருவதை கண்டறிந்து  குன்னூர் நகராட்சி அதிகாரிகள்  அவற்றை  சீல் வைத்தனர். மேலும்  தொடர்ந்து  இது போன்று விதி மீறல் கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : houses ,Gunnar ,
× RELATED அடுத்தடுத்த வீடுகளில் பணம், நகை கொள்ளை