×

தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் பிரசார வேன்

கோவை, நவ. 5:  கோவை மாவட்டத்தில் வேளாண்மை துறை சார்பில்  தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் - ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் திட்டத்தின் கீழ் பிரசார விழிப்புணர்வு ஊர்திகளை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
2019-2020ம் நிதியாண்டில் தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் ஊட்டச்சத்து மிக்க சிறு தானியங்கள் திட்டத்தின் கீழ் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை கோவை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான பிரசார விழிப்புணர்வு ஊர்திகளை மாவட்ட கலெக்டர் ராஜாமணி நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஊட்டச்சத்து மிக்க சிறு தானியங்களின் பயன்கள், சாகுபடி தொழில்நுட்ப முறைகள் குறித்து ஒலிபெருக்கி வாயிலாகவும், சிறு கையேடுகள் வழியாகவும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பிரசாரம் துவக்கப்பட்டுள்ளது. இந்த பிரசார வாகனமானது அனைத்து கிராமங்களிலும் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் ராஜாமணி நிருபர்களிடம் கூறுகையில்,  ‘‘சிறு தானியங்களின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு பிரசாரமானது துவக்கப்பட்டுள்ளது. சிறு தானியங்களின் பயன்கள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை வட்டார வேளாண்மை அலுவலர்கள் வழங்குவார்கள்’’ என்றார்.

Tags : National Food Security Movement ,
× RELATED எடப்பாடியின் பிரசார வேன் மீது செருப்பு வீச்சு: அதிமுக பிரமுகர் கைது