×

மக்காச்சோள பயிர்களில் படைப்புழு தாக்குதலை தடுக்க மருந்து தெளிப்பு

பவானி, நவ.5: பவானி வேளாண் வட்டாரத்தில் 75 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிர்களில் படைப்புழுவின் தாக்குதலைத் தடுக்கும் வகையில் இலவசமாக மருந்து தெளிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பவானி, கல்வாநாயக்கனூர், மைலம்பாடி, போத்தநாயக்கனூர், கொம்புக்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மக்காச்சோளப் பயிர்களைச் சாகுபடி செய்துள்ளனர். இப்பயிர்களில் படைப்புழு தாக்கினால் மகசூல் முற்றிலும் பாதிக்கப்படுவதோடு, பயிர்களின் குருத்து பாதிக்கப்பட்டு சேதமடையும். கடந்த ஆண்டு பரவலாக படைப்புழு தாக்குதல் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது முன்னெச்சரிக்கையாக மருந்து தெளிக்கும் பணி நடந்து வருகிறது. மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை திட்டத்தின்கீழ் 20 நாட்களுக்குட்பட்ட பயிர்களுக்கு ஒருமுறையும், 45 நாட்களுக்குட்பட்ட பயிர்களுக்கு மற்றொரு முறையும் தெளிக்க விவசாயிகளுக்கு ரூ.4500 மதிப்பிலான மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலும், மருந்தடிக்க கூலியும் வழங்கப்படுகிறது. பவானியை அடுத்த போத்தநாயக்கன்புதூரில் விவசாயத் தொட்டத்தில் மருந்தடிக்கும் பணியினை ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பிரேமலதா, வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) ஜெயராமன் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டார். பவானி வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி, வேளாண்மை அலுவலர் ஆசைத்தம்பி,  துணை அலுவலர அப்புசாமி, உதவி அலுவலர் சித்தையன், திருமுருகன் உள்பட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உடனிருந்தனர்.

Tags :
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை