×

தொழிலாளி திடீர் சாவு

பவானி, நவ.5: ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காடையம்பட்டியில் தனியார் ஆலையில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இங்கு, சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த அய்யனாரப்பன் மகன் பெரியசாமி (57) கம்பி கட்டும் பணியில் கடந்த 3 நாட்களாக ஈடுபட்டிருந்தார்.நேற்று முன்தினம் பணியிலிருந்தபோது நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதையடுத்து, சக தொழிலாளர்கள் பெரியசாமியை பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே இறந்தார்.

Tags : death ,
× RELATED தனியார் தொழிற்சாலையில் தலையில் இரும்பு விழுந்து தொழிலாளி நசுங்கி பலி