×

சுடுகாடு பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றாவிட்டால் ஈரோட்டில் 7ம் தேதி சாலை மறியல்

ஈரோடு, நவ.5:  ஈரோடு அருகே பெரியசேமூர் பகுதி சுடுகாடு பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றாவிட்டால் வரும் 7ம் தேதி சாலை மறியல் நடத்த உள்ளதாக தமிழக ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. அந்த கட்சியின் ஈரோடு பெரியசேமூர் நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெரியசேமூரில் நடந்தது. நகர செயலாளர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சண்முகம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். கூட்டத்தில், ஈரோடு சூளை பள்ளம் அருகில் இருந்து பெரியசேமூர், எல்விஆர் காலனி, ஜீவாநகர், கல்லாங்கரடு, வேளாண்நகர் செல்லும் வழியில் பெரியசேமூர் சுடுகாடு மற்றும் டாஸ்மாக் கடை வரை அபாயகரமான கழிவுகளை மூட்டை மூட்டையாக கட்டி கொண்டு வந்து இங்கு கொட்டி விட்டு செல்கின்றனர்.ரோட்டையே குப்பை மேடாக மாற்றி விட்டார்கள். மழைக்காலங்களில் இந்த குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்றுகளையும் உருவாக்கி வருகிறது.

இந்த குப்பைகளை அகற்ற வேண்டும் என பலமுறை மாநகராட்சி 2வது மண்டலத்தில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த குப்பைகளை வரும் 6ம் தேதிக்குள் மாநகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும். இல்லையெனில், 7ம் தேதி மாலை 4 மணிக்கு கனிராவுத்தர்குளம் அருகில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இக் கூட்டத்தில், மாநகர செயலாளர் கண்ணன், நிர்வாகிகள் யூசுப், செல்வராஜ், ஜெயமணி, பாப்பாத்தி, கருப்பணன், ராஜேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags : area ,Sudukadu ,Erode ,road ,
× RELATED சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிக்கு புயல் எச்சரிக்கை