×

தில்லையாடி மகிமலை ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

தரங்கம்பாடி, நவ.5: தில்லையாடி மகிமலை ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த தொழிலாளி நீரில் மூழ்கி பலியானார். நாகை மாவட்டம், தில்லையாடி பக்கமுள்ள துடரிபேட்டை கீழத்தெருவை சேர்ந்த பாக்கியம் மகன் தாவிது(22). கூலித்தொழிலாளி. இவர் ஞாயிற்றுக்கிழமை மாலை நண்பர்களுடன் தில்லையாடி மகிமலை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் அதிகம் இருந்ததால் சூழலில் சிக்கி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரது நண்பர்கள் பொதுமக்கள் உதவியுடன் தேடி ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தாவிசை சடலமாக மீட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பொறையார் இன்ஸ்பெக்டர் செல்வம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பொறையார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : river ,Mahamelai ,
× RELATED மொபட் மோதி தொழிலாளி பலி