×

தனியார் ஆலை தொழிலாளர்கள் குறைதீர் முகாமில் மனு

நாகை, நவ.5: நாகையை அடுத்த பனங்குடி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் இல்லை என்றால் அந்த தொழிலாளர் குடும்பத்தை கருணை கொலை செய்ய கோரி நாகை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுதனர்.நாகையை அடுத்த பனங்குடியில் செயல்பட்டு வரும் சென்னை எண்ணெய் சுத்தகரிப்பு ஆலையில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர் நல சங்கத்தை சேர்ந்த கவுரவத் தலைவர் ரவி, செயலாளர் கண்ணன், தலைவர் முத்துராஜா பனங்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மணிவண்ணன் ஆகியோர் தலைமையில் சுமார் 80க்கும் மேற்பட்டவர்கள் நாகை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்க்கும் நாள் முகாமில் டிஆர்ஓ இந்துமதியிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:நாகை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் அமைந்துள்ள சென்னை எண்ணெய் சுத்தகரிப்பு ஆலையை (சிபிசிஎல்) விரிவாக்கம் செய்திட சிபிசிஎல் நிர்வாகம் முன்வந்துள்ள நிலையில், கடந்த 1.4.2019 முதல் ஆலையின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இதனால் ஆலையை எந்த நேரமும் மூடும் சூழ்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்த 94 ஒப்பந்த தொழிலாளர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்திட சிபிசிஎல் ஒப்பந்த தொழிலாளர் சல சங்கத்தின் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்நிலையில் நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் தாசில்தார் தலைமையில் மூன்று கட்ட அமைதி பேச்சுவார்தை நடைபெற்றது. இதில் சிபிசிஎல் நிர்வாகம் எங்களின் பணி பாதுகாப்பிற்கு இன்று வரை எவ்வித எழுத்துபூர்வ உத்திரவாதத்தையும் அளிக்கவில்லை. எங்கள் சங்க ஒப்பந்த தொழிலாளர்களின் பணி பாதுகாப்பிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறோம். இல்லை என்றால் எங்கள் சங்கத்தை சார்ந்த 96 ஒப்பந்த தொழிலாளர்கள் அவர்தம் குடும்பத்தினர் என சுமார் 500க்கும் மேற்பட்டவர்களை தய்வு செய்து கருணை கொலை செய்திட கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : detention camp ,
× RELATED மாநகராட்சி 92-வது வார்டில் `மக்களுடன்...