×

தாமதமின்றி பயிர் காப்பீடு தொகை வழங்க வேண்டும் கீழ்வேளூர் சாகுபடிதாரர் சங்கம் மனு

நாகை , நவ.5:தாமதமின்றி பயிர் காப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று கீழ்வேளூர் சாகுபடிதாரர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. கீழ்வேளூர் சாகுபடிதாரர் சங்க தலைவர் வீரமுரசு நாகை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதியிடம் வழங்கி கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கீழவேளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலமாக பயிர் காப்பீடு செய்த எங்கள் பகுதி விவசாயிகளுக்கு 2017-18 ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகைகள் முழுமையாக வழங்கப்படாமல் பாதி தொகை வழங்கப்பட்டும், மீதி தொகையை 5.9.2019ம் தேதி வழங்குவதாக காப்பீடு நிறுவன அலுவலர்கள், வங்கி செயலாளர், வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்க மேலாளர், வேளாண்மைதுறை உதவி இயக்குநர் ஆகியோர் உத்திரவாதம் அளித்தனர். ஆனால் இதுநாள்வரை விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் காலதாமதம் செய்து வருகின்றனர். தற்போது விவசாய காலத்தில் பணம் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே உடனே நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டிய தொகை வழங்க ஏற்பாடு செய்திட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


Tags :
× RELATED மாவட்டத்தில் பலத்த மழைக்கு...