நாகையில் மாவட்ட அளவிலான தொடக்க நிலை திறன் போட்டி

நாகை, நவ.5: சர்வதேச திறன் போட்டிகளில் பங்கேற்க மாவட்ட அளவிலான தொடக்க நிலை திறன் போட்டிகளில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம் என்று நாகை மாவட்ட கலெக்டர் பிரவின் பி நாயர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் 2021 செப்டம்பர் மாதம் சர்வதேச திறன் போட்டி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வசதியாக தொடக்க நிலையில் மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நாகையில் நடக்கிறது. இதற்கு https://worldskillsindia.co.in/woridkill/world/என்ற இணையதளத்தில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். 6 துறைகளில் உள்ள 47 தொழிற் பிரிவுகளில் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தும் வகையில் மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடக்கும். இதற்கு விண்ணப்பிக்க வரும் 25ம் தேதி கடைசி நாள் ஆகும். 1996ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதிக்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும். ஐந்தாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரைக் கல்வித் தகுதி பெற்றவர்கள், பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் மற்றும் படித்து கொண்டிருப்பவர்கள், தொழிற் பயிற்சி நிலையம், தொழில் நுட்ப கல்லூரி மற்றம் பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் படித்துக் கொண்டிருப்பவர்கள், தொழிற் சாலையில் பணியில் உள்ளவர்கள், குறுகிய கால தொழிற் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். மேலும் விவரங்களை தொலைபேசி எண்: 04365 250126 என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>