×

குளத்தை ஆக்கிரமித்த ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

தரங்கம்பாடி, நவ.5: செம்பனார்கோவில் அருகே மடப்புரத்தில், குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றி, சேதமடைந்த படித்துறைகளையும் புதிய கட்டி கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே மடப்புரம் மெயின் சாலையில் சின்னசாவடிக் குளம் உள்ளது. மிகவும் பழமையான இக்குளத்தில் ஆகாய தாமரைகள் அடர்த்தியாக படர்ந்து குளத்து நீரை பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது. மேலும் படித்துறைகளும் இடிந்து கிடக்கின்றன. ஆகாய தாமரைகளை அகற்றி புதிய படித்துறை கட்ட வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, மனிதநேய ஜனநாயக கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் நூஜகான் கூறியதாவது:

மடப்புரத்தில் உள்ள சின்னசாவடிக் குளம் மிகவும் பழைமையான குளம். அப்பகுதி மக்களுக்கு பெரிதும் பயன்பட்டு வந்த குளம். இப்பொழுது இக்குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் அடர்த்தியாக படர்ந்து பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது. மேலும் குளத்தில் உள்ள படித்துறைகள் இடிந்து கிடக்கின்றன. சாலை ஒரத்தில் குளத்தின் கரை மண் அரிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் முழுமையாக இந்த குளத்தை பயன்படுத்த முடியவில்லை. உடனே குளத்தில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றி புதிய படித்துறைகளை அமைக்க வேண்டும். மேலும் சாலை ஓரத்தில் குளத்தில் ஏற்பட்டுள்ள மணல் அரிப்பை தடுக்க சிமெண்ட் கான்கரீட் சுவர் அமைக்க வேண்டு என்று கூறினார். டெல்டா மாவட்டத்திற்கு ஒதுக்கி வரவேண்டிய யூரியா என்ன ஆச்சு, காவிரி டெல்டா மாவட்டத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட யூரியா ராமநாதபுரம் போன்ற மாவட்டத்தில் கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்ய அனுப்பப்பட்டு விட்டதா என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

Tags : removal ,pond ,
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...