×

கோயில் நிலங்கள் கையகப்படுத்தப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு

கொள்ளிடம், நவ.5: கொள்ளிடம் பகுதியில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான விளை நிலங்களை மீட்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் சிவலோகதியாகராஜர்கோயில் திருமயிலாடி சுந்தரேஸ்வரர்கோயில் திருமுல்லைவாசல் முல்லைவனநாதர்கோயில் திருக்கருகாவூர் சிவன் கோயில், மாதிரவேளூர் மாதலீஸ்வரர் கோயில், வடரெங்கம் ரெங்கநாதபெருமாள் கோயில் ஜம்புகேஸ்வரர்கோயில் கோயில் உள்ளிட்ட கோயில்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்ததும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானதாகவும் இருந்து வருகிறது. மேற்கண்ட மிகவும் புராதனமான கோயில்களுக்கு சொந்தமான சுமார் ஆயிரம் ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் தனியார் வசம் ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது. இந்த நிலங்களின் மூலம் வரும் வருவாயிலிருந்து கோயிலுக்கு பயன் ஏதுமில்லை. குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே இந்த நிலங்கள் இருந்து வருகின்றன. காஞ்சிபுரம் கோயிலில் குத்தகை அளிக்காதவர்களின் பெயர் பட்டியல் வெளியிட்டதுபோல் மேற்கண்ட கோயில்களின் நிலம் வைத்திருப்போரின் பட்டியல்களை வெளியிட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் சார்பில் சமூக ஆர்வலர் காமராஜ் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Temple Lands Be ,devotees ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...