×

நெற்பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறை

முட்டை: ஒவ்வொரு தாய் ஈயும் 100 முதல் 300 சிவப்பு நிறமுடைய நீள குழல் வடிய முட்டைகளை தனியாகவோ அல்லது 2 முதல் 6 முட்டை களைக் கொண்ட குவியலாகவோ இலைப்பரப்பின் மேல் அல்லது இலையுறையின் மீது அல்லது அரிதாக சில சமயங்களில் தேங்கிய தண்ணீரிலும் இடும். மேகட் புழுக்கள் : முட்டைகளிலிருந்து 3 அல்லது 4 நாட்களில் மேகட் புழுக் கள் வெளிவரும். வளர்ந்த மேகட் புழுக்கள் கால்கள் இல்லாமலும், இளம் சிவப்பு நிறத்துடனும் காணப்படும். இவை இலைகளிலிருந்து கீழ்நோக்கி படர்ந்து சென்று, வளரும் நுனிப்பகுதியை தாக்கும் போது செஸிடோஜென் என்ற நச்சு உட்செலுத்தப்படுகிறது. மேகட் புழு பருவமானது 8 முதல் 10 நாட்களைக் கொண்டது. கூட்டுப்புழுவானது இப்பூச்சியினால் தாக்கப்பட்டு உருமாறிய நீண்ட குழல் வடிவ (வெங்காய) இலைக்குள்ளேயே காணப்படும். இந்தப் பருவம் 3 முதல் 5 நாட்களைக் கொண்டது.

பூச்சி : ஈ வகையினைச் சார்ந்த இந்தப்பூச்சியானது மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாகவும், கொசுவைப் போல் சிறியதாகவும், நீண்ட மெல்லிய கால்களுடன் இருக்கும். இந்த பூச்சியின் வயிறு சிறிய தாகவும், தடித்தும் காணப்படும். இதன் வாழ்க்கைச் சுழற்சியானது 14 முதல் 21 நாட் களைக் கொண்டது. தாய் ஈக்கள் இரவு நேரங்களில் மிகவும் சுறுசுறுப்புடன் காணப்படும். தாக்குதலுக்கு சாதகமான தட்பவெப்பநிலை : விட்டுவிட்டுப் பெய்யும் மழைத் தூறல், தொடர்ந்து காணப்படும் மேக மூட்டமான சீதோஷ்ணம் மற்றும் 83 முதல் 87 சத காற்றின் ஈரப்பதம் போன்றவை இதன் தாக்குதலுக்கு உகந்த காலநிலையாகும். செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை இதன் தாக்குதல் மிக அதிகமாகக் காணப் படும். காலதாமதமாக பயிரிடப்படும் பகுதிகளிலும் இதன் தாக்குதல் காணப்படும். சேதத்தின் அறிகுறிகள் : நாற்றங்கால் முதல் தூர் கட்டும் பருவம் வரை இதன் தாக்குதல் காணப்படும். வளர்ந்த மேகட் புழுக்கள் நெற்பயிரின் வளரும் முனையைத் தாக்கும். இதன் தாக்குதலால் இலையுறை அசாதாரண வளர்ச்சி அடைந்து வெள்ளி நிறத்திலான கொம்புகள் போன்றோ அல்லது வெங்காய இலையைப் போன்ற குழலாகவோ தோற்றமளிக்கும். இது இளம் பச்சை அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். இதனை பார்ப்பதற்கு யானை யின் கொம்பைப் போன்று இருப்பதால் இதனை ஆனைக்கொம்பன் என்றழைப்பர்.

குழல் போன்ற தூர்களில் மேற்கொண்டு வளர்ச்சி இருக்காது மற்றும் கதிர்களும் உருவாகாது. குழலின் நுனிப்பாகத்தின் வழியாக ஈ வெளியேறிய பிறகு மேகட் புழுவின் தோல் பாதி வெளியே நீட்டிக்கொண்டு இருப்பதனைக் காண லாம். இதன் தாக்குதல் நாற்றங்காலில் காணப்பட்டாலும் 35 முதல் 45 நாட் கள் வயதுடைய இளம் பயிரையே அதிகமாக சேதப் படுத்துகிறது.பொருளாதார சேதநிலை : 10 சதவீத தூர்களில் தாக்குதல் (வெங்காய இலை சேதம்) காணப்படுதல்.
ஆனைக்கொம்பன் பூச்சி மேலாண்மை : அறுவடை செய்த பின்பு நிலத்தை உடனடியாக உழவு செய்திட வேண்டும். வயலில் களைகள் இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். விளக்குப் பொறி களை வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். ஆனைக்கொம்பன் ஈக்கு எதிர்ப்புத்திறனுடைய குறுகிய கால ரகங்களான ஆடுதுறை -45, ஆடுதுறை - 48 மற்றும் மத்திய மற்றும் நீண்ட கால ரகங்களான ஏடிடி -39, மதுரை -3 ஆகியவற்றை நடவு செய்ய வேண்டும்.
பிளாட்டிகேஸ்டர் ஒரைசே என்னும் புழு ஒட்டுண்ணிகள் (அளவில் சிறிய கொசு போன்று காணப்படும் கருப்பு நிற குழவிகள்) கொண்ட தூர்களை சேகரித்து வயலில் இடவேண்டும். தழைச்சத்து உரங்களை பரிந்துரை செய்துள்ள அளவுகளில் மட்டுமே இடவேண்டும். தூக்குதல் பொருளாதார சேதநிலையைத் தாண்டினால் தயோமீதாக்ஸாம் 25 டபிள்யூ.ஜி - 40 கிராம், கார்போசல்பான் 25 ஈ.சி- 400மிலி, பிப்ரோனில் 5 எஸ்.சி - 500 கிராம், குளோர்பைரிபாஸ் 20 ஈ.சி - 500 மிலி ஆகிய ரசாயனக் கொல்லி மருந்துகளில் ஏதாவது ஒரு மருந்தினை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளித்தும் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு வேளாண் பேராசிரியர்கள் ராஜா ரமேஷ், ராமசுப்பிரமணியன் ஆகியோர் கூறினர்.டெல்டா மாவட்டங்களில் நெற்பயிரை பல்வேறு வகையான பூச்சிகள் விதைப்பு காலம் முதல் அறு வடை சமயம் வரையில் தாக்கி 25 முதல் 30 சதவீதம் வரை மகசூல் இழப்பை உண்டு பண்ணுகின்றன. அவற்றில் ஆனைக்கொம்பன் ஈ மிக முக்கியான ஒன்றாகும். இதன் தாக்குதலால் 50 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுவதாகக் கண்டறியப் பட்டுள்ளது.

Tags :
× RELATED ஆட்டம் பாட்டத்துடன் நடந்த அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது