×

வெங்காயத்தாமரை மண்டி கிடக்கும் சேர்வராயன் குளம்

திருத்துறைப்பூண்டி, நவ.5: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரபகுதியில் 32க்கும் மேற்பட்ட குளங்கள்நகராட்சி பராமரிப்பில் இருந்து வருகிறது.இதில் பெரும்பாலான குளங்கள்ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. இதில் பொதுமக்கள்பயன்பாட்டில் 10க்குள் உள்ள குளங்களே உள்ளது.இருக்கின்ற குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பல ஆண்டுகள்ஆகிவிட்டது.குளங்களுக்கு தண்ணீர் வந்து செல்லும் வாய்க்கால்களும் அடைபட்டுள்ளது. இதே போன்று 17வது வார்டு வேதை சாலை பகுதியிலுள்ள சேர்வராயன் குளம் தூர்வாரி சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது. தற்போது அந்த குளத்தில் படித்துறைகள் எல்லாம் சேதமடைந்து குளம் முழுவதும் வெங்காயதாமரை செடிகள் மண்டிக்கிடக்கிறது. எனவேஇந்த குளத்தை தூர்வார வேன்டுமென்று பொதுமக்கள்மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சேர்வராயன்குளம் தூர்வாரிபல ஆண்டுகள்ஆகிறது.குளத்தில் ஆழமும் இல்லை, படித்துரையும் கிடையாது, குளம் முழுவதும் வெங்காயதாமரை செடிகள் மண்டி இருக்கின்ற தண்ணீரும் தெரியவில்லை. இதன் அருகிலேயே ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளியும் உள்ளது.குளத்தை சுற்றி குடியிருப்புகளும் உள்ளது.மேலும் கொஞ்ச தூரத்தில் அரசு மருத்துவமனை, எல்ஐசி அலுவலகமும் உள்ளது. இப்பகுதியிலுள்ள அனைவருக்கும் பயன்படும் வகையில் குளத்தை தூர்வாரி, படித்துறைகள்அமைத்து தர வேண்டும் என்றார். இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில் நகரபகுதியில் நகராட்சிக்கு சொந்தமான குளங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிதண்ணீர் வந்து செல்லும் அளவுக்கு செய்தால் பொதுமக்களும் பயன்பெறுவார்கள், நிலத்தடி நீரும் உயரும் என்றனர்.

Tags : Servairayan Pond ,
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...