நீடாமங்கலத்தில் குண்டும், குழியுமான சாலை சீரமைப்பு

நீடாமங்கலம்,நவ.5: தினகரன் செய்தி எதிரொலியாக நீடாமங்கலத்தில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்பட்டது.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வழியாக செல்கிறது நாகை மைசூர் தேசிய நெடுஞ்சாலை. .இந்நிலையில் நீடாமஙகலம் நகரில் செல்லும் சாலையில் பெரியார்சிலை அருகிலும்,தாலுகா அலுவலகம் செல்லும் வழியிலும் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமான நிலையில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. நீடாமங்கலத்திற்கு சுற்றியுள்ள கிராம மக்கள் 25 க்கும் மேற்பட்ட கிராமத்தினர் தினந்தோறும் வந்துசெல்கின்றனர். அது மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்லும் நிலையில் நீடாமங்கலம் கடைவீதியில் பெரியார்சிலை அருகிலும்,தாலுகா அலுவலகம் செல்லும் வழியிலும் ,அண்ணாசிலை அருகிலும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தினகரன் நாளிதழில் கடந்த 31ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது.செய்தி எதிரொலியால் சாலைகளில் உள்ள குண்டும் குழிகளை தற்காலிகமாக கப்பிகள் போட்டு சமப் படுத்தியுள்ளனர்.சாலையை சீரமைக்க படத்துடன் செய்தி வெளியிட்ட தினகரனுக்கும் ,நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் வாகன ஓட்டிகள்,பொது மக்கள் நன்றியை தெரிவித்தனர். மேலும் சாலையில் கப்பிகள் போட்டு சமப்படுத்தியது மட்டுமின்றி மழை காலம் என்பதால் சாலையை வாகன ஓட்டிகளுக்கோ,பொது மக்களுக்கோ சிரமமின்றி சாலையாக மாற்ற வேண்டும் என மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>