×

வடுவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி

மன்னார்குடி, நவ. 5: வடுவூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர்கள் பணியில் இல்லாததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் வடுவூரில் இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக கடந்த 10 வருடங்களுக்கு முன்பு தரம் உயர்த்தப்பட்டது. இந்த சுகாதார நிலையத்தை வடுவூர், வடபாதி, தென் பாதி, அக்ரகாரம், புதுக்கோட்டை, எடமேலையூர், மூவர்கோட்டை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இம்மருத்துவமனையில் 36 படுக்கைகளுடன் உள் நோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கம், மகப்பேறு அரங்கம், எக்ஸ்ரே, நவீன ரத்த பரிசோதனை இயந்திரம் போன்ற வசதிகள் உள்ளன. அத்துடன் போதிய கட்டிட வசதியும் உள்ளது.இங்கு பல் மருத்துவர், சித்த மருத்துவர், பொதுமருத்துவர் என 5 மருத்துவர்கள், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருந்து வந்தனர்.

ஆனால் தற்போது இந்த மருத்துவமனையில் 2 நிரந்தர மருத்துவரும், வேறு மருத்துவமனையில் பணிபுரியும் ஒருவர் தற்காலிகமாகவும் பணியாற்றி வருகின்றனர்.தினமும் 300க்கும் மேற்பட்டோர் இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் இரவு நேரங்களில் மருத்துவர்கள் பணியில் இருப்பதில்லை. இதனால் விபத்து உள்ளிட்ட பல் வேறு அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இந்த மருத்துவமனைக்கு இரவு நேரங்களிலும் சிகிச் சை அளிக்கும் வகையில் கூடுதலாக டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து வடுவூர் வளர்ச்சிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் வீர மனோகரன் கூறுகையில், அனைத்து வசதிகளையும் கொண்ட இந்த மருத்துவமனையில்5 டாக்டர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில் தற்போது 3 டாக்டர்களே பணியில் உள்ளனர். அவர்களும் காலை முதல் மாலை வரை மட்டுமே சிகிச் சை அளிக்கின்றனர். இரவு நேர பணிக்கு மருத்துவர்கள் பணியில் இருப்ப தில்லை. எனவே மாவட்ட பொதுசுகாதார துறை அதிகாரிகள் இதில் தலையிட்டு இரவு நேர பணிக்காக கூடுதல் மருத் து வர்களை நியமனம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்படு வதற்கான காரணங்கள் குறித்து சுகாதாரத்துறை வட்டாரங்களில் விசாரித்த போது அவர்கள் கூறுகையில், வடுவூர் மட்டுமின்றி திருவாரூர் மாவட்டம் முழுவதும் கிராமப்புறம் மற்றும் நகர் புரா மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. கிராம பகுதிகளில் அரசு மருத்துவமனை களில் பணியாற்ற சில டாக்டர்களே விரும் புவதில்லை. அதற்கு பல காரணங்கள் உள்ளன. திருவாரூர், நாகை, ராமநாதபுரம் மற்றும் மலை பிரதேச மாவட்டங்களை பின் தங்கிய மாவட்டங்களாக தமிழக அரசு அறிவித்து அங்கு கிராமப்புற மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள் தங்களின் மேற்படிப் பிற்காக தேர்வு எழுத செல்லும் போது வழங்கப்படும் மதிப்பெண்களின் கூடுதலாக 10 சதவீதம் அளிக்கப்பட்டு வந்தது.

அரசின் இந்த சிறப்பு சலுகை கடந்த வருடம் திடீரென நிறுத்தப்பட்டது. பின்னர் டாக்டர்கள் தொடர்ச்சியாக போராடியதன் விளைவாக தற்போது மீண்டும் கூடுதலாக 10 சதவீதம் மதிப்பெண் வழங்க படுகிறது.மேலும் அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு மேற் படிப்பிற்கு செல்லும் போது வழங்க பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீடு சலு கையும் தற்போது நடைமுறையில் இல்லை. இது போன்ற காரணங்களி னால் தான் கிராம புறங்களில் அரசு டாக்டர்களாக வருவதற்கு பெரும்பாலா னோர் விரும்பு வதில்லை. இந்த நிலை நீடித்தால் வரும் காலங்களில் கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற டாக்டர்கள் வருவது கேள்விக்குறியாகிவிடும் அபாயம் உள்ளது.
 எனவே தமிழக அரசும் சுகாதார துறையும் இப்பிரச்சனைகளில் உரிய கவ னம் செலுத்தி அரசு மருத்துவர்களின் நியாமான கோரிக்கைகளை குறிப்பாக மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : doctors ,Vadavoor Primary Health Center ,
× RELATED கோவை சாய்பாபா காலணி பகுதியில் 2...