பிரதம மந்திரி கவுரவ ஊக்கத்தொகை திட்டம் 8ம்் தேதிக்குள் இணைய வாய்ப்பு

வலங்கைமான்.நவ,5: வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்ரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்.பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் விவசாயிகள் இணைய ஓர் அரிய வாய்ப்பு. பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் என்று சொல்லக்கூடிய பிரதம மந்திரி விவசாயிகள் கவுரவ ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் அரசு அலுவலர் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் தவிர, சொந்த நிலமுடைய குறு,சிறு மற்றும் பெரிய தகுதியுடைய அனைத்து விவசாயிகளுக்கும் ஊக்கத்தொகையாக ஒரு தவனைக்கு ரூ.2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு ரூ..6000 வழங்கப்படுகிறது.இதில் இதுவரை இணையாத விவசாயிகளுக்கு தற்போது இணைய நல்ல வாய்ப்பு. இவ்வாறு ஊக்கத்தொகை பெற விரும்பும் விவசாயிகள் நவம்பர் 8ம் தேதிக்குள் தங்களுக்கு அருகிலுள்ள பொது சேவை மையத்தினை அணுகி தங்களது பெயரினை இணைத்து கொள்ளலாம்.இதற்கு தேவையான ஆவணங்கள் விவசாயின் சிட்டா நகல், ரேஷன் அட்டை நகல், ஆதார் நகல், வங்கி கணக்குபுத்தக நகல், விவசாயின் கைப்பேசி எண் ஆகியவற்றுடன் சேர்ந்து கொள்ளலாம், இவ்வாறு பிரதம மந்திரி விவசாயிகள் கௌரவ ஊக்கத்தொகை திட்டத்தில் சேர்ந்து தங்களுக்கு கிடைக்கின்ற இந்த ஊக்கத்தொகையினை தடையின்றி பெற்று பயனடையலாம் என அவர் அதில் ெதரிவித்துள்ளார்.

Related Stories:

>