×

திருத்துறைப்பூண்டியில் நுகர்வோருக்கு அலட்சியமான பதில் கூறும் மின் வாரிய அதிகாரிகள்

திருத்துறைப்பூண்டி, நவ.5:திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரில் புதிய மின் மீட்டர் பொருத்தும் பணிகள்நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.புதிய மின் மீட்டர் பொருத்தும் போது சரியான மின் இணைப்பில் பொருத்தாமல் தில்லுமுல்லுகள் நடைபெறுகின்றது.இதனால் மின் நுகர்வோருக்கு அதிகமின்கட்டணம் வருகிறது. இதுகுறித்து மின் வாரியஅதிகாரிகளிடம் கேட்டும், நேரில் மனு அளித்தும் விளக்கம் கேட்டால் சரியானபதில் கூறாமல் அலட்சியமாக பொதுமக்களை மிரட்டும்விதமாக பேசுகிறார்கள்.இதுகுறித்து மின்நுகர்வோர் பலர் மின் துறையிலுள்ள குறை தீர் மன்றத்திற்கும், மேலதிகாரிகளுக்கும் மனு செய்துள்ளனர்.அங்கும் சரியானபதிலில்லை. இதுகுறித்து மின்வாரியஅதிகாரிகளிடம் கேட்டால் நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள், மேலதிகாரியிடம் மனு அளித்தாலும் சரி, கோர்ட்டுக்கு போனாலும் சரி.நாங்கள் சொல்வதுதான் சட்டம் என்று பொதுமக்களை அச்சுறுத்துகிறார்கள். மின்நுகர்வோர் ஒருவர் கூறும்போது எனது பூட்டிக்கிடக்கும் வீட்டிற்கு ரூ.2000/- மின் கட்டணம் வந்துள்ளது.எப்போதும் குறைந்தபட்சகட்டணம் கட்டி வருவேன். ஆனால் இப்போது ரூ.2000/-வந்துள்ளது. இதுபற்றி நேரிலும் தபால் மூலமாகவும் மனு செய்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேலே குறிப்பிட்ட கட்டணத்தை யாரிடமாவது கடன் வாங்கி கட்டிவிட்டு நுகர்வோர் நீதிமன்றத்தை நாடப்போகிறேன் என்றார்.

மேலும் ஒரு மின் நுகர்வோர் கூறுகையில் நான் அஞ்சலகத்தில் மின் கட்டணம் செலுத்தி ரசீது வைத்துள்ளேன்.எனது மின் இணைப்பை துண்டித்து விட்டார்கள். ஏன் என்று கேட்டதற்கு எங்கள்கணக்கில் வரவு இல்லை. நீங்கள் வேண்டுமானால் சம்பந்தப்பட்ட அஞ்சலகத்தில் சென்று கேளுங்கள்என்றுகூறுகின்றனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிநகர செயலாளர் ரகுராமன் கூறுகையில்: இப்போது டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்துகிறார்கள். இந்த மின் மீட்டர் பொருத்திய பிறகு உங்கள் மெயின் சுவிட்சை ஆப் செய்துவிட்டு பின்னர் மின் மீட்டர் ஓடுகிறதா என்று பரிசோதித்துக்கொள்ளுங்கள்.மின் இணைப்பை துண்டித்த பிறகும் மின் மீட்டர் இயங்குகிறது என்றால் உங்கள் மின் மீட்டரிலிருந்து வேறு எங்கோ மின்சாரம் போகிறது என்று பொருள்.அதனைதகுதிவாய்ந்த மின் பணியாளரைக்கொண்டு சரிசெய்துகொள்ளுங்கள்.இதுபற்றி பொதுமக்களின் குறைகளை சரிசெய்யமின்வாரியஅதிகாரிகள் முன்வருவதில்லை. எனவே பொதுமக்களாகியாக நாம்தான் நமது மின் இணைப்பினையும், மின் மீட்டரும் சரியாக இயங்குகிறதா என்றுஉறுதிசெய்துகொள்ள வேண்டும்.முன்பெல்லாம் புகார் செய்தால் உடனே மின் மீட்டர் மாற்றியும், மின் இணைப்பினைஉறுதி செய்தும் கொடுப்பார்கள்.இப்போது அலட்சியமானபதிலே கூறிவருகிறார்கள்.பொதுமக்களின் கேள்விகளுக்கு அலட்சியமாகபதில் கூறும் அதிகாரிகள் மீது தக்கநடவடிக்கையும், பொதுமக்களின் மனுக்களை உரிய முறையில் நடவடிக்கை எடுக்க அரசு ஆவண செய்ய வேண்டும் என்றார்.

Tags : Power Board Officers ,Consumers ,
× RELATED கொப்பியம் கிராமத்தில் நுகர்வோரை...