முத்துப்பேட்டை பகுதியில் டெங்கு தடுப்பு பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரம்

முத்துப்பேட்டை, நவ.5: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை, கீழவாடியக்காடு, விலாங்காடு, மாங்குடி, ஆள்காட்டுவெளி ஆகிய பகுதியில் வட்டார மருத்துவ அலுவலர் கிள்ளிவளவன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பழனியப்பன் ஆகியோர் தலைமையில் சுகாதாரத்துறையினர் கடந்த2 தினங்களாக பல்வேறு டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில் அரசு துறை அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகள் அங்கு பொது மக்கள், மாணவர்களிடம் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தொடர்ந்து சுகாதார துறையினர் பள்ளி வளாகங்களில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் கிடந்த தேவையற்ற பொருட்களை அகற்றி பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தொடர்ந்து மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயமும் வழங்கப்பட்டது.அதே போல் ஜாம்புவானோடை பகுதிகளில் பஸ்ஸ்டாண்ட், கடைத்தெரு, குடியிருப்பு பகுதிகள், தனியார் மற்றும் அரசு பள்ளிகள் ஆகிய பகுதிகளுக்கு சென்ற சுகாதாரத்துறையினர் தேவையற்ற பொருட்களை மஸ்தூர்பணியாளர்களை கொண்டு அகற்றினர். மேலும் மக்களுக்கு நிலவேம்பு கசாயமும் வழங்கப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர்கள் ராஜ்குமார், நாகராஜ் உட்பட சுகாதார துறையினர், மஸ்தூர்; பணியாளர்கள் உடன் சென்றனர்.

Tags :
× RELATED டெங்கு தடுப்பு மற்றும் பிளாஸ்டிக்...