×

வேலூர் மாநகராட்சி கமிஷனர் பணியிடமாற்றம்

வேலூர், நவ.5:வேலூர் மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் திருச்சி மாநகராட்சி கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.நெல்லை மாநகராட்சி கமிஷனராக பணியாற்றியவர் சிவசுப்பிரமணியன். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு வேலூர் மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்று பணியாற்றி வந்தார். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 5 மாநகராட்சி கமிஷனர்களை பணியிடமாற்றம் செய்து நகராட்சிகள் நிர்வாக ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி, வேலூர் மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்த சிவசுப்பிரமணியன் திருச்சி மாநகராட்சிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தியை வேலூர் மாநகராட்சி கமிஷனராக நியமித்து நகராட்சிகள் நிர்வாக ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Vellore Corporation Commissioner ,
× RELATED என்ஐடி கல்லூரியில் வேலை வாங்கி தருவதாக வங்கியில் பணபரிவர்த்தனை