×

பயிர்காப்பீடு தொகை வழங்க கோரி விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை

திருவாரூர், நவ.5: கடந்த ஆண்டிற்கான பயிர்காப்பீடு தொகை வழங்கக்கோரி திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நேற்று மனு அளித்தனர்.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ம்தேதி நள்ளிரவில் ஏற்பட்ட கஜா புயல் காரணமாக சம்பா சாகுபடி மிகவும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இதற்குரிய பயிர் காப்பீடு இழப்பீடு தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையில் பாதிக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இந்த காப்பீடு தொகை விடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 573 வருவாய் கிராமங்களில் 357 கிராமங்களுக்கு மட்டுமே இந்த காப்பீடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீதம் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் பயிர் காப்பீடு தொகை வழங்கக்கோரி தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நீடாமங்கலம் தாலுகா அரிச்சபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் தங்களது கிராமத்திற்கு பயிர் காப்பீடு தொகை வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Tags : Office ,Farmers Collector ,
× RELATED தற்கொலைக்குத் தூண்டும் கந்துவட்டி...