×

மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், நவ.5: மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பால் உள்ளிட்ட வேளாண்மைத் தொழிலையும், நடுத்தர சிறு வணிகத்தையும் பாதிக்கும் வகையில் உலக நாடுகளுடன் கையெழுத்திட உள்ள மத்திய அரசின் மண்டல பொருளாதார புரிந்துணர்வு கூட்டமைப்பு ஒப்பந்தத்தை கண்டித்தும் அதனை ரத்து செய்யக்கோரியும் திருவாரூரில் நேற்று பழைய பேருந்து நிலையம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ரங்கராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் மாசிலாமணி, முன்னாள் எம்எல்ஏ உலகநாதன் மற்றும் பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : government ,
× RELATED ஆத்தூர் ஒன்றியத்தில் கருங்குளம் நிரம்புவதால் நெல் விவசாயிகள் மகிழ்ச்சி