×

பள்ளி ஆண்டு விழா

பொன்னேரி, நவ. 5:  மீஞ்சூர் வட்டார நாடார் உறவின்முறை சங்கத்தின் சார்பில் புங்கமேடு பகுதியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் பள்ளியின் 38வது ஆண்டுவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.  தனபாக்கியம் திரவியம், சீனியம்மாள் அன்பழகன், சரஸ்வதி சிவசுப்ரமணியன், பத்மினி ஆனந்தசங்கர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றிவைத்தனர்.இந்த சங்கத்தின் தலைவர் திரவியம் நாடார் தலைமை வகித்தார். செயலாளர் அன்பழகன் அனைவரையும் வரவேற்றார். பொருளாளர் சிவசுப்பிரமணியன், துணை தலைவர் முனியசாமி, துணை செயலாளர் ஆனந்த் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பள்ளி மாணவ மாணவிகளின் நாட்டுப்புற பாட்டு நடனம், தற்காப்பு கலைகள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  இதில் கலந்துகொண்ட சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் பேச்சுப்போட்டி கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். சங்க நிர்வாகிகள் சின்னமணி, தங்க முத்து, தாமஸ், எமராஜன், பாலசேகர், ராதாகிருஷ்ணன், ஆறுமுகம், முருகேசன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Tags : School Anniversary ,
× RELATED பள்ளி ஆண்டு விழா