×

மக்கள் குறைதீர் நாள் கூட்டம் போட்டிகளில் வெற்றி பெற்ற 49 மாணவர்களுக்கு சான்றிதழ்

திருவாரூர், நவ.5: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது நேற்று கலெக்டர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை வழங்க வேண்டுதல், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், கல்விக் கடன் வழங்க வேண்டும், இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், முதியோர் ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 187 மனுக்களை கலெக்டரிடம் பொதுமக்கள் வழங்கினர். அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறையினரிடம் அந்த மனுக்களை வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தார். மேலும் மாநில அளவில் கரூரில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் முதலிடம் பெற்ற நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவன் கமலேஷ், 2ம் இடம் பெற்ற திருவாரூர் வேலுடையார் மேல்நிலை பள்ளி மாணவர்கள் ராஜ்குமார், யுவன்சஞ்சய் மற்றும் உலக சிக்கன நாளையொட்டி மாவட்ட அளவில் நடைபெற்ற கட்டுரை, பேச்சு, நடனம் மற்றும் நாடக போட்டிகளில் வெற்றி பெற்ற திருவாரூர் நியூ பாரத் மெட்ரிக் பள்ளி மாணவிகள் உட்பட மொத்தம் 49 பேருக்கு சான்றிதழ்களை கலெக்டர் ஆனந்த் வழங்கினார். இதில் டி.ஆர்.ஒ பொன்னம்மாள், கலெக்டரிடன் நேர்முக உதவியாளர் விஜயலெட்சுமி (சிறுசேமிப்பு), முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர்கள் சங்குசுப்பையா, ஆதிராமசுப்பு, முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் தெய்வபாஸ்கர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Day Meeting Competition ,
× RELATED முத்துப்பேட்டை அருகே தென்னங்கன்றுகளுக்கு தீ வைத்தவருக்கு கத்திக்குத்து