×

சங்கேந்தியில் குடிநீர் தேக்க தொட்டி குழாய் உடைப்பு சீரமைப்பு

முத்துப்பேட்டை, நவ.5:முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதி மற்றும் ஒன்றிய பகுதிக்கு குடிநீர் கொள்ளிடத்திலிருந்து எடையூர் வந்து அங்கிருந்து சம்பு மூலம் பிரித்து ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிக்கு குடிநீர் குழாய் மூலம் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் முத்துப்பேட்டை அடுத்த சங்கேந்தி கிராமத்தில் உள்ள 5வது வார்டு பகுதியில் 10ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. சங்கேந்தி ஊராட்சிக்கு என இருந்த தனி சம்புவிலிருந்து குடிநீர் பம்பிங் செய்யப்பட்டு இந்த குடிநீர் தொட்டியில் ஏற்றப்பட்டது. அதில் குடிநீர்அழுத்தம் குறைந்ததால் எடையூர் சம்புவிலிருந்து முத்துப்பேட்டைக்கு செல்லும் குழாயில் இணைப்பு எடுத்து இந்த டேங்கில் ஏற்றப்பட்டு வருகிறது. பின்னர் இதிலிருந்து குழாய்கள் மூலம் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான குடியிருப்புகளுக்கு குடிநீர் தினந்தோறும் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குடிநீர் டேங்கிலிருந்து வௌியேற்றப்படும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீண் விரயமாகி சென்றது. இதனால் தினந்தோறும் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி அப்பகுதியில் உள்ள தரிசு இடத்தில் குளம் போல் தேங்கி கிடந்தது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கவனத்திற்கும் எடுத்து சென்றும் சீரமைக்க முன்வரவில்லை. அதனால் தினந்தோறும் டேங்கில் ஏற்றப்படும் குடிநீர் மக்களுக்கு எந்த பயனுமில்லாமல் குடிநீர் வீணாகி சென்று வந்தது.

இதனை கலெக்டர் கவனத்தில் எடுத்துக்கொண்டு குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இப்பகுதி மக்கள் விடுத்துள்ள கோரிக்கை குறித்து நேற்று தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இந்த செய்தியை பார்த்த கலெக்டர் ஆனந்த், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அங்கு வந்த முத்துப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி முன்னிலையில் ஊராட்சி பணியாளர்கள் உடைந்த குழாயை சரிசெய்தனர். வருவாய் அலுவலர் புனிதா மற்றும் ஒன்றிய அதிகாரிகள் உடன் இருந்தனர். தினகரன் செய்தி எதிரொலியாக சரி செய்யப்பட்டதை கண்ட அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினகரனுக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags : Sangendi ,
× RELATED வடசங்கந்தி ஊராட்சியில் மக்கள்...