×

ஆவடி அருகே பரபரப்பு மனநிலை பாதித்த சிறுமி பாலியல் பலாத்காரம்

ஆவடி நவ. 5: ஆவடி அருகே 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 5 குழந்தைகளின் தந்தையை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆவடி அடுத்த மோரை, ஜெ.ஜெ. நகர் 2வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (50) குடை பழுதுபார்க்கும் தொழிலாளி. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 5 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதேபகுதியில் கணவனை இழந்த பெண் 11 வயது சிறுமியுடன் வசித்து வருகிறார். அந்த சிறுமி மனநிலை பாதிகப்பட்டவர். அந்தப்பெண் காரை சுத்தப்படுத்தும் பொருட்களை சாலையின் சிக்னலில் விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். அவள் வேலைக்கு செல்லும் போது சிறுமியை அங்கம்மாள் என்ற பெண் பராமரித்து வருகிறார். அந்தப்பெண் வழக்கம் போல் நேற்று முன் தினம் வியாபாரத்துக்கு சென்றுவிட்டர்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமியிடம் நகராஜ் நைசாக பேச்சு கொடுத்து பிஸ்கட், ஸ்வீட் வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதன் பிறகு அவளை தூக்கிக்கொண்டு அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் பாருக்கு சென்றுள்ளார். சிறுமியை பாருக்கு வெளியே நிற்கும்படி கூறிவிட்டு நாகராஜ் மட்டும் உள்ளே சென்று மது அருந்தி விட்டு வெளியில் வந்தார். அதன்பிறகு அவர் போதையில் வீட்டுக்கு அழைத்து சென்று  பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த சிறுமி, சத்தம்போட்டு அலறியுள்ளார்.
அவளது சத்தம் கேட்டு அங்கம்மாள் உட்பட  பொதுமக்கள் ஓடி வந்தனர். பின்னர் அவனிடம் இருந்து சிறுமியை மீட்டனர். மேலும் பொதுமக்கள் நாகராஜை சரமாரியாக அடித்து உதைத்து  ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட சிறுமியை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஷோபாராணி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.Tags : Avadi Awakening ,rape victim ,
× RELATED அறந்தாங்கியில் பாலியல் வன்கொடுமையால்...