×

திருப்புட்குழி ஊராட்சியில் சிமென்ட் சாலை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

காஞ்சிபுரம், நவ.5: காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி ஊராட்சியில் சிமென்ட் சாலை அமைத்து தரக் தோரி கலெக்டர் பொன்னையாவிடம், பொதுமக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.திருப்புட்குழி ஊராட்சி பாலுசெட்டிச்சத்திரம் அகரம் பகுதி பிள்ளையார் கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கிறோம். இங்குள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், மழைக் காலத்தில் சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது.

அவசர சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு செல்வதற்கு ஆட்டோவும் செல்ல முடியாத நிலை உள்ளது. பைக்கில் செல்லும்போது பள்ளம் மேடு தெரியாமல் பலர் விழுந்து காயமடைகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
எனவே, மேற்கண்ட பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் தெருவில் சிமென்ட் சாலை அமைத்து தரவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : cement road ,Thiruppudigai ,
× RELATED இலவச வீட்டுமனை பட்டா வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை