வேகவதி ஆற்றில் தொடர் மணல் திருட்டு

காஞ்சிபுரம், நவ.5: காஞ்சிபுரம், புத்தேரி மக்கள் கலெக்டர் பொன்னையாவிடம் அளித்த மனு.காஞ்திபுரம், புத்தேரி பகுதி வேகவதி ஆற்றில் மணல் கொள்ளை தொடர்ந்து நடக்கிறது. பைக்கில் மணல் திருட்டு நடக்கிறது. பைக்கில் மணல் கடத்தும் சமூக விரோதிகள், சாலைகளில் அதிவேகமாக செல்கின்றனர். இதை தட்டிக்கேட்டால், எங்களைமிரட்டுகின்றனர்.பைக்கில் அதிவேகமாக செல்வதால் பள்ளி செல்லும் மாணவர்கள், குழந்தைகள் சாலையில் செல்ல அச்சமாக உள்ளது. எனவே, பொதுமக்கள் ஒன்றுகூடி மணல் எடுக்க செல்லும் பாதையில் தற்போது பள்ளம் எடுத்து மணல் திருட்டை தடுத்துள்ளோம்.தற்போது புத்தேரி கிராமத்தில் நிலத்தடி நீர் சுமார் 100 அடிக்கு சென்றுவிட்டது. மணல் திருட்டை தடுக்காவிட்டால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்.எனவே, திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதை முற்றிலுமாக தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>