×

தேசிய வேளாண் நிறுவனம் சார்பில் சூனாம்பேடு பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

செய்யூர், நவ.5: தேசிய வேளாண் நிறுவனம் மற்றும் தனியார் மென்பொருள் நிறுவனம் இணைந்து கிராம புறங்களில் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த  இல்லீடு தேசிய வேளாண் நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனம் மதுராந்தகம், சித்தாமூர், அச்சிறுப்பாக்கம், லத்தூர் ஒன்றியங்களை சுற்றியுள்ள  நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயத்துக்கான நீர் வளத்தை பெருக்கும் வகையில், நீர்நிலைகளை சுத்தப்படுத்துதல், நீர் உறிஞ்சி குட்டைகள் அமைத்தல், ஏரிகளை தூர்வாருதல் உள்பட பல்வேறு பணிகளை கடந்த 6 ஆண்டுகளாக செய்கிறது.சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனமும், தேசிய வேளாண் நிறுவனத்துடன் இணைந்து  விவசாயத்துக்கான பல்வேறு சேவைகளை செய்கிறது.மேலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் சுற்று  வட்டாரப் பகுதிகளில் உள்ள ஏரி கரைகள், குளக்கரைகளில், பள்ளி வளாகம், கோயில் வளாகம், அரசுக்கு சொந்தமான இடங்கள்,  சாலை ஓரங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.
\இதில் புளியமரம், பூவரசு,  வேப்பம், பாதாம், புங்கை உள்பட வனம் சார்ந்த மரங்களை நட்டு பராமரிக்கின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டு, அதில் முதல் கட்டமாக சூனாம்பேடு அடுத்துள்ள தென்னேரிபட்டு,  பனையடிவாக்கம், சூனாம்பேடு பள்ளி வளாகம் ஆகிய பகுதிகளில் நேற்று சுமார் 2,500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை மென்பொருள் ஊழியர்கள், நட்டு பணியினை தொடங்கி வைத்தனர்.இதில்தேசிய வேளாண் நிறுவன இயக்குனர் ராம சுப்பிரமணியம், தேசிய வேளாண் ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள்  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Tags :
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில்...