×

செங்கல்பட்டு, மறைமலைநகரில் பட்டப்பகலில் கார் கண்ணாடியை உடைத்து ₹3 லட்சம் துணிகர கொள்ளை

செங்கல்பட்டு, நவ.5: மறைமலைநகர் அடுத்த  காட்டாங்கொளத்தூர் காந்தாளி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர்  ராஜேந்திரன் (69). ஓய்வு பெற்ற ஆசிரியர். நேற்று காலை ராஜேந்திரன்,  மறைமலைநகர் இந்தியன் வங்கியில் தனது பென்ஷன் வங்கி கணக்கிலிருந்து ₹40 ஆயிரம் எடுத்தார்.பின்னர் அங்கிருந்து, அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் தனது பேரன் பேத்திகளுக்காக மாதாமாதம் சேமிப்பு தொகையை செலுத்துவதற்காக, பைக்கில் புறப்பட்டார். மறைமலைநகர் தனியார் மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தார்.அப்போது, பின்னால் பைக்கில் வந்த 2 பேர், ராஜேந்திரனிடம், தங்கள் பணம் கீழே விழுந்துவிட்டது என கூறினர், அதைகேட்டு, ராஜேந்திரன் பைக்கை நிறுத்திவிட்டு, கீழே கிடந்த பணத்தை எடுக்க சென்றார். உடனே, மர்மநபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது பைக்கில் இருந்த பணப்பையை எடுத்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.கீழே கிடந்த ₹100 எடுத்து கொண்டு திரும்பிய ராஜேந்திரன், பையில் இருந்த ₹40 ஆயிரம், வங்கி பாஸ்புக், 5 அஞ்சலக சேமிப்பு பாஸ்புக் அணைத்தையும் மர்மநபர்கள் திருடி சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.புகாரின்படி மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

* செங்கல்பட்டு அடுத்த வெண்பாக்கத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (30). சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.நேற்று மதியம் செங்கல்பட்டு பகுதியில் உள்ள வங்கிக்கு தமிழ்ச்செல்வன் சென்றார். அங்கு, தனது கணக்கில் இருந்து ₹3 லட்சத்தை எடுத்து கொண்டு,  காரில் அண்ணா நகர் 4வது குறுக்கு தெருவுக்கு சென்றார். அங்கு, காரை நிறுத்திவிட்டு நண்பர் வீட்டில் சிறிது நேரம் பேசிவிட்டு வெளியே வந்தார்.அப்போது, அவரது காரின் இடது பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு தமிழ்ச்செல்வன் அதிர்ச்சியடைந்தார். காரை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த ₹3 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.புகாரின்படி செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபாக்ளை வலைவீசி தேடி வருகின்றனர்.தாம்பரம் : தாம்பரம் அருகே போலீஸ்காரரின் வீட்டை உடைத்து நகைகளை, மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், சபாபதி நகரை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (30). ஆவடி சிறப்பு காவல்படை காவலர். இவரது மனைவி கல்பனா (25). கல்பனா சில தினங்களுக்கு முன்பு, தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார்.இந்நிலையில், ராஜேஷ்குமார் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். பின்னர், நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோவை உடைத்த மர்மபர்கள், அதில் இருந்த 5 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.புகாரின்படி சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : burglary robbery ,Maramalai Nagar ,Chengalpattu ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...