காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் விஏஓக்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்

காஞ்சிபுரம், நவ.5: காஞ்சிபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் விஏஓக்களுக்கு அடிப்படையான அரசு சலுகைகள் மறுக்கப்படுவதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று மாலை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு 270 நாட்கள் இருந்தும், காஞ்சிபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் மகப்பேறு விடுப்பு எடுத்த பெண் விஏஓவுக்கு 15 நாட்கள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.விஏஓக்களுக்கு மாதந்தோறும் 5ம் தேதிக்குப் பிறகே சம்பளம் வழங்கப்படுகிறது. 29 நாட்கள் வரை மருத்துவ விடுப்பு வழங்கும் அதிகாரம் வட்டாட்சியருக்கு இருந்தும், 7 நாள் மருத்துவ விடுப்புக்கும் கூட ஊழியர்களை சப் கலெக்டர் அலுவலகத்துக்கு அலைய வைக்கிறார்கள்.10 ஆண்டுகள் பணிபுரிந்த விஏஒக்களுக்கும் தகுதிகாண் சான்று வழங்காமல், இழுத்தடிப்பதால் அரசின் பணப்பலன் கிடைக்காமல் தவிக்கின்றனர். இந்தப் பிரச்னைக்களுக்கு தீர்வுகாண வலியுறுத்தி விஏஓக்கள் நடத்திய திடீர் உள்ளிருப்பு போராட்டத்தால் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : office protest ,Kanchipuram taluk ,
× RELATED விஏஓக்கள் பணிபுரியும் இடத்தில் தங்க...