×

மதுராந்தகம் வட்டார தலைமை மருத்துவமனை சாலையில் வார சந்தையை இடமாற்றம் செய்ய வேண்டும்

மதுராந்தகம், நவ.5: மதுராந்தகத்தில், திங்கட்கிழமை தோறும் நடைபெறும் வரச் சந்தையை இடமாற்றம் செய்யக்கோரி பாஜ சார்பில், கலெக்டரிடம் மனு வழக்கப்பட்டது.மதுராந்தகத்தில் வட்டார தலைமை மருத்துவமனை சாலையில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் வரச்சந்தை நடந்து வருகிறது. இந்த சந்தையில் 500க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்படும். இதைெயாட்டி, காய்கறிகள் வாங்க மதுராந்தகத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகின்றனர்.
சந்தையின்போது, மருத்துவமனை நுழைவாயிலை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்கின்றனர். இதனால், மருத்துவமனைக்கு வரும் டாக்டர்கள், நோயாளிகள், ஆம்புலன்ஸ் உள்பட அவசர வாகனங்கள் உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது. அதேபோல், சவக்கிடக்கில் இருந்து வெளியே செல்லும் வழியையும் வியாபாரிகள் ஆக்கிரமித்து கொள்கின்றனர். இதனால், அமரர் ஊர்திகளும் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

மேலும், மதுராந்தகத்தில் இருந்து சித்தாமூர் செல்லும் சாலையில், சந்தை நடக்கும்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பயணிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர்.இந்நிலையில், மதுராந்தகம் வாரச்சந்தையை உழவர் சந்தை அருகே ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலையின் இருபுறமும் அமைந்துள்ள சர்வீஸ் சாலையில் மாற்ற வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட பாஜ தலைவர் சிவசெந்தமிழரசு தலைமையில் நேற்று கலெக்டர் பொன்னையாவை சந்தித்து மனு அளித்தனர்.


Tags : Maduranthanam Regional Chief Hospital Road ,
× RELATED மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணிகள்...