×

வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

காஞ்சிபுரம், நவ.5: புதுடெஙரலியில் வழக்கறிஞர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுடெல்லி தீஸ் ஹஸாரி மாவட்ட நீதிமன்றத்தில் எவ்வித முகாந்திரமும் இல்லாமல் வழக்கறிஞர்கள் மீது போலீசார் கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்தி, கலவரம் ஏற்படுத்தியதை கண்டித்தும், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி முழுவதும் வழக்கறிஞர்கள் நேற்று ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையொட்டி, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் தமிழ்நாடு - புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க மாநில துணைத் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் சங்க மாநில இணை செயலாளர் சிவக்குமார் உள்பட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

உத்திரமேரூர்: டெல்லியில் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து கண்டனத்தை பதிவு செய்தனர்.டெல்லியில் உள்ள ஹசாலி நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் வழக்கறிஞர்களை பணியில் இருந்த போலீசார் காட்டுமிராண்டி தனமாக தாக்கியுள்ளனர். அதுமட்டுமிறி வழக்கறிஞர்கள் மீது தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் படுகாயமடைந்த வழக்கறிஞர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.போலீசார், சட்டத்தை கையில் எடுத்து நீதிமன்ற வளாகத்துக்குள் வழக்கறிஞர்களை கொடூரமாக தாக்கி, நீதிமன்றத்தை கலவர பூமியாக மாற்றியுள்ளனர். இதுபோல் வழக்கறிஞர்களை தாக்கிய போலீசாரை கண்டிக்கும் வகையில் நேற்று ஒருநாள் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்த வழக்கறிஞர்கள், தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

Tags : Lawyers ,court ,
× RELATED நீதிமன்ற கட்டிடத்திற்கு கூடுதல் வசதி ஏற்படுத்த ரூ.14.59 கோடி நிதி