×

டெல்லி கோர்ட்டில் தாக்குதல் விவகாரம் ஐகோர்ட்டில் வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: வக்கீல்களை தாக்கிய டெல்லி போலீசை கண்டித்து உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் கடந்த 2ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில், போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வக்கீல் ஒருவர் காயமடைந்தார். மேலும், தடியடியில் பல வக்கீல்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள், உயர்நீதிமன்ற வளாக நுழைவாயிலில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமை வகித்தார். பெண் வக்கீல்கள் சங்க தலைவர் லூயிஷால் ரமேஷ் உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்துக் கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தில், டெல்லி போலீசாருக்கு எதிராக கண்ட கோஷங்களை எழுப்பினர். டெல்லி போலீசார்மீது சட்டப்படி மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வக்கீல்கள் வலியுறுத்தினர்.

Tags : Attorneys ,court ,Delhi ,
× RELATED ஓபன் புக் தேர்வு ரிசல்ட் வெளியீடு:...